Blog

தலித் தலைமையை தமிழக
அரசியலில் இருந்து புறக்கணிக்க
நினைக்கும் அதிதீவிர திருமா
எதிர்ப்பாளர்கள் அவ்வப்போது
சிறுத்தைகள் மீது விமர்சனம்
வைப்பது வாடிக்கயானதும்,
வேடிக்கையானதும் கூட…

அதில் சிலர் வைக்கும்
விமர்சனங்கள்
வினோதமானவைகளாக
இருக்கும். சிலர் அதிதீவிர தலித்
ஆதரவாளர்கள் போலவே
முகமூடி போட்டுக்கொண்டு
வருவார்கள். எது எப்படியோ
விமர்சனம் செய்யவேண்டும்,
திருமாவை எதிர்க்கவேண்டும்
அவ்வளவே அவர்களது நோக்கம்.

திருமாவளவன் தலித் அரசியல்
பேசும் போது சாதித்தலைவன்
என்றும்; தமிழ்தேசிய அரசியல்
பேசும்போது தலித்துகளை
திருமா கைவிட்டுவிட்டார் என்றும்;
இசுலாமியர்களின் உரிமைக்கு
பேசும் போது அது இவருக்கு
தேவையில்லாத ஒன்று என்றும்,
கம்யுனிசம் பேசும்போது
அதற்குத்தான் கம்யூனிஸ்டுகள்
இருக்கிறார்களே இவர் ஏன்
அதை பேசுகிறார் என்றும்
விமர்சிப்பது உண்டு….

தாழ்த்தப்பட்டவன் ஒருவன் இந்திய
அளவில், அதையும் தாண்டி உலக
அளவில் பேசப்படுகிறானே என்ற
எரிச்சலில் வரும் உளறலே அவை.
அதன் தொடர்ச்சியாக தற்போது
விடுதலைசிறுத்தைகள் கட்சியில்
இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை
விடுதலை சிறுத்தைகள் கட்சியில்
இருந்து பிரித்து வேறொரு
இயக்கத்திற்கு கொண்டு சொல்ல,
சில முற்போக்கு முகமூடி போட்டுக்
கொண்டிருக்கும் கும்பல்கள்
துடியாய் துடிக்கிறார்கள். ஆகவே
தான் தொடர்ந்து வெறுப்பு
பிரச்சாரத்தை கந்தக அமிலம்
போல வீசி வருகிறார்கள்….

அவர்களுக்கு தி.மு.க, அ.தி.மு.க,
ம.தி.மு.க, பா.ம.க. காங்கிரஸ்,
தே.மு.தி.க. போன்ற இன்ன
பிற கட்சிகளில் தாழ்த்தப்பட்ட
மக்கள் இருப்பது பற்றி எவ்வித
கவலையும் கிடையாது…
தமிழகத்தில் தலித் இயக்கம்
என்றாலே, திருமாவளவன் பெயர்
முந்திக் கொண்டு வருவதில்
எரிச்சல் அடைந்த அவர்கள்,
எப்பாடுபட்டாவது விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியை உடைத்து
விடலாம் என்று பகல் கனவு
காணுகிறார்கள். அவர்களுக்கு…

“சிந்திய ரத்தம் வீண்போகாது
சிறுத்தைகள் படை பின்வாங்காது”
இவ்வரிகளை நினைவு
படுத்துகிறேன். எங்களை
(விடுதலைச்சிறுத்தைகளை)
வளர்த்த தாலாட்டு மொழிகள்
இவை போன்றவை தான். எந்த
ஆதரவுக்கரமும் இன்றி, நெருக்கடி
நிலைகளிலே மைல்கல்,
மைல்கல்லாக பாய்ந்து
வந்திருக்கிறோம். இன்னமும்
பாய்ச்சலோடு இருக்கிறோம்…

தஞ்சை.லெனின்

வழக்கறிஞர்