அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த 285 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் 100 சதவீத வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணியினை நிறைவு செய்த 38 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுத் தெரிவித்து, கௌரவித்தார்கள்.
