திருச்சி அருகே இலவச மின்சாரம் தி வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய இளமின் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோம்பையை சேர்ந்தவர் முத்து. விவசாயியான இவர், விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி தாட்கோ மூலம் விண்ணப்பித்து இருந்தார். தொடர்ந்து, நிதி தாட்கோ மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், மின் இணைப்பு வழங்க தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 27ம் தேதி செங்காட்டுபட்டி மின்வாரிய இள மின் பொறியாளர் அலுவலகம் சென்ற முத்து. அங்கு இருந்த இள மின் பொறியாளர் ராஜீ(40) என்பவரை சந்தித்தபோது அவர் ரூ.3000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக முத்து. திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனை பேரில் ரசாயனம் தடவிய ரூ.3,000த்துடன் திருச்சி மாவட் டம் துறையூர் (110 கி.வோ) துணைமின் நிலைய அலுவலகத்திற்கு முத்து சென்றார். அப்போது அங்கிருந்த இளமின் பொறியாளர் ராஜூவிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி மணிகண்டன் தலைம யிலான இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார், ராஜூவை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
