புதுக்கோட்டை கலெக்டராக இருந்து வரும் அருணா வின் மேல் பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அரசால் விடப்படும் டெண்டர்களுக்கு எந்த கமிஷனும் அரசியல் வாதிகளுக்கோ அதிகாரிகளுக்கோ கொடுக்க வேண்டியதில்லை என்றும் அப்படி யாரேனும் கமிஷன் கேட்டு தொந்தரவு செய்தால் புகாராக தெரிவித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.
அதே போல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டு பெற்றால் அந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வப்போது அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கவே அஞ்சுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இப்படி இருக்கையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் ஆணை வழங்கும் போது கமிஷன் கேட்டு பெற்றுக் கொண்டு விட்டு மீண்டும் பணம் பெற பணிகள் நடைபெற்று வரும் போதே அடிக்கடி ஆய்வு செய்வதாக கூறி பணத்தை டிமாண்ட் செய்து கேட்டு பெற்றுச் செல்வதாக ஒப்பந்ததாரர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
அவர்களிடம் ஏன் இப்படி அடிக்கடி இப்படி பணம் கேட்டு எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் என கேட்கும் போது இந்த பணம் எங்களுக்கு இல்லை கலெக்டர் என்ன சொல்கிறாரோ அதைத் தான் நாங்கள் செய்கிறோம்.என தெரிவிக்கின்றனர்.முன்னாள் பணியில் இருந்து தற்போது மாற்றுதலாகி இருக்கும் பிரகாஷ் என்பவர் மூலம் கலெக்டருக்கு பணம் போனது. பிரகாஷ் மாற்றுதல் ஆனதற்கு பிறகு பிரசன்னா என்பவர் மூலம் கலெக்டருக்கு பணம் போவதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் இது போல் பல்வேறு துறைகளில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கமிஷன் தலைவிரித்தாடுவதாக பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிட மும் பேசப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் கமிஷன் கலெக்ஷன் ஆகியவற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
