சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினருடன், ஹுண்டாய் மோட்டார் இந்தியன் பவுண்டேஷன் இணைந்து சாலை மேம்பாட்டிற்காக 200 இரும்பு தடுப்பான்கள் (IRON BARRICADE), 50 ஸ்டீல் தடுப்பான்கள் (STEEL BARRICADE) மற்றும் 50 மடிக்கக்கூடிய தடுப்பான்கள் (FOLDABLE BARRICADE) என மொத்தம் 300 பாதுகாப்பு தடுப்பான்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ். இ.கா.ப. அவர்களிடம் ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேசன் ஆணையாளர் அறங்காவலரும். ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டடின் முழ நேர இயக்குநரும் தலைமை உற்பத்தி அதிகாரியுமான திரு.சி.எஸ். கோபால கிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியானது (06.07.2026) அன்று சென்னை, எழும்பூரில் உள்ள இராஜாரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.

மேலும், இது போன்ற தொழில் நிறுவனங்களுடன் இணைத்து சாலை பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், ‘பாதுகாப்பான சாலைகள், பாதுகாப்பான உயிர்கள்’ என்ற தனது தொலைநோக்கு இலக்கை அடைவதில் சென்னை பெருநகர காவல்துறை தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியது. இந்நிகழ்ச்சியில் முனைவர் B.சாமூண்டீஸ்வரி இ.கா.ப., கூடுதல் காவல் ஆணையாளர். போக்குவரத்து, சென்னை பெருநகர காவல், திரு.P.பகலவன், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர், போக்குவரத்து (தெற்கு). திருமதி.S.மெஹலினா ஐடன், காவல் துணை ஆணையாளர், போக்குவரத்து (கிழக்கு) மற்றும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டடின் நிர்வாக இயக்குநர் திரு. யங்மியுங் பார்க் மற்றும் தலைவர் (Govt,Relations) திரு.S.விஜயபாஸ்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
