பட்டுக்கோட்டை உட்கோட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை சரகம் காடந்தங்குடி கோட்டகம் வயல்வெளி பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா மலையூர் கிராமத்தைச் சேர்ந்த சீனி மகன் ரவிச்சந்திரன் மற்றும் நடராஜன் மகன் மணிகண்டன் ஆகியோர்களுக்கு சொந்தமான சுமார் 200 செம்மறி ஆடுகளை வைத்து கிடை போடுவது விற்பனை செய்வது போன்ற தொழிலை நடத்தி வருகின்ற அவர், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பெருமகளூர் சேர்ந்த கருப்பையன் மகன் அய்யாச்சாமி என்பவரை ஆடு மேய்க்கும் தொழிலுக்காக பெருமகலூரை சேர்ந்த நாராயணன் மனைவி பிரேமா என்ற புரோக்கர் பணத்தைப் பெற்றுக் கொண்டு அய்யாசாமி என்பவரை ஆடுமேய்க்கும் தொழிலுக்கு மேற்படி ரவிச்சந்திரன் மணிகண்டன் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார்.
அவர் கடந்த 13 2.2026 முதல் அவரிடம் திருத்துறைப்பூண்டி போன்ற இடங்களில் ஆடு மேய்த்து விட்டு தற்பொழுது காடந்தகுடி கோட்டகம் என்ற இடத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்க்க வைத்தது தகவல் கிடைக்கப்பெற்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு சங்கர் அவர்கள் தலைமையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திரு அகத்தியன் பட்டுக்கோட்டை கொத்தடிமை ஒழிப்பு முறை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அழகு 2 மீனாள் அழகு1 பாலச்சந்தர் உட்கோட்ட கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை மீட்பு கண்காணிப்பு குழு உறுப்பினர்கள்புனல் ரவி, இளந்தென்றல், தஞ்சாவூர் செட் இந்தியா NGO அலுவலர் அருண், வருவாய் ஆய்வாளர் இளவரசன், கிராம நிர்வாக அலுவலர் மாரியம்மாள் அலுவலர்கள் மணிவேல், மணிகண்டன் ஆகியோர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டது.
அப்போது அய்யாசாமி என்பவர் ரவிச்சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர்களிடம் கொத்தடிமையாக இருந்ததும் சுதந்திரம் அற்ற நிலையில் 24 மணி நேரம் அவர்களுடனும் காலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மதுக்கூர் காவல் உதவி ஆய்வாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு காவலர்களுடன் கொத்தரிமையாக இருந்த அய்யாசாமி -ஐ மீட்டும் கொத்தடிமையாக வைத்திருந்த ரவிச்சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர்களை விசாரணைக்கு உட்பட்டு மதுக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட கொத்தடிமையாக இருந்த அய்யாச்சாமி என்பவருக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் விடுவிக்கப்பட்ட சான்று வழங்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட அய்யாசாமி என்பவரை பேராவூரணி வட்டாட்சியர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் மூலமாக அவரது வீட்டிற்கு சென்று பாதுகாப்பாக உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
