தஞ்சை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைகளில் 6 தனிப்படை கள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரத்தநாடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லம்பட்டியில் உள்ள மளிகை கடை யில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக் கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரத்தநாடு உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஜென்னிங்ஸ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முத்துக் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக 282 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மளிகை கடையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 282 கிலோ குட்கா பொருள்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் சிறையில் செய்ப்பட்டு அடைக்கப்ட்டார்.
