18 வழக்குகளில் தொடர்புடைய பிரபல செல்போன் திருடனை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையங்களில் இரவு நேரங்களில் தூங்கும் நபர்களிடமிருந்து செல்போன்களை திருடி வந்த நிலையில் தாம்பரம் உதவி ஆணையாளர் நெல்சன் உத்தரவின் பெயரில் தாம்பரம் காவல் ஆய்வாளர் செல்லதுரை தலைமையில் போலீசார் இரவு நேரங்களில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மப்டியில் கண்காணித்த போது இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரிடம் இருந்து செல்போனை திருடிய போது கைது செய்தனர் .
