கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய தீடீர் சோதனையில் கஞ்சா, போதை கிராம் கஞ்சா ஆயில், சிந்தடிக் ட்ரக்ஸ், மாத்திரைகள், போதை வஸ்த்துக்கள், செல்போன்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் 22 ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் 4.5 கிலோ கஞ்சா, 50 மில்லி மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 18 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. ஐந்து குற்றவாளிகளில் இரண்டு பேர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
