Blog

பத்திரிகை அமைப்புக்களின் தாய் அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதுக்காக, சென்னை பிரஸ் கிளப் எடுத்த பெரும் முயற்சியின் காரணமாக கடந்த 15ம்தேதி அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளான தலைவராக திரு.சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளராக திரு.அசீப், பொருளாளராக திரு.மணிகண்டன், உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும், தேர்தல் நடைபெற்ற அன்றே வாழ்த்து செய்தி வெளியிட்டு இருந்த நிலையில் (20.12.2024) இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் புதிதாக தேர்வு பெற்ற நிர்வாகிகளுக்கு சென்னை பிரஸ் கிளப் சார்பில் தலைவர் அ.செல்வராஜ், பொதுச் செயலாளர் ச.விமலேஷ்வரன், துணைத் தலைவர் சு.காதர் உசேன், மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வெற்றி பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்,

இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்தே சென்னை பத்திரிகையாளர் மன்றம் இயங்க உள்ளதையும், உழைக்கும் பத்திரிகையாளர் யாரேனும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், உடனடியாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாகுபாடுயின்றி எந்த நேரத்திலும் எவ்வித சூழலிலும் துணை நிற்கும், என மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயம், பொதுச் செயலாளர் அசீப் ஆகியோர், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தனர்