2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுமத்தால் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலருக்கான தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 46 நபர்களுக்கு 27.11.2024-ம் தேதி பணிநியமன ஆணையை தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்களால் வழங்கப்பட்டு மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஷ் ராவத் இ.கா.ப., அவர்கள்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தஞ்சை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்