சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கிடைத்த ஆதரவு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சௌமியா மரணத்திற்கு கிடைக்கவில்லை? ‘’சௌமியா தற்கொலை தான்? ஆனால் இதை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்’’ என்றொரு செய்தி உலா வந்ததை கணக்கில் கொண்டு நாமலே களத்தில் இறங்கினோம்..
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா கருக்காக்குறிச்சி ராஜா குடியிருப்பை சார்ந்த ரமேஷ்- முத்துலட்சுமி இவர்களின் மூத்த மகள் R. சௌமியா இவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் (Dmlt) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செட்டியார் சமூகத்தை சார்ந்தவர்.இந்த ஊரில் செட்டியார் சமூகத்தை சார்ந்தவர்கள் சுமார் எட்டு குடும்பங்கள் மட்டுமே வசிக்கிறார்கள்.. இவர்கள் அனைவருக்கும் விவசாய நிலங்கள் உள்ளது விவசாய பணிகளையே செய்து வருகிறார்கள்.அதேபோல் இந்த கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் வசித்தாலும் கள்ளர் சமூகம் மட்டுமே அதிகாரத்திலும் ,அரசியல் செல்வாக்கிலும் இருக்கிறார்கள்.
கடந்த 25-12-2024 தேதியன்று சௌமியாவின் பெற்றோர்கள் பக்கத்து ஊரான சூரக்காடு உறவினர் ஒருவர் துக்கத்திற்கு சென்று விட்டார்கள்.அன்று இரவு சுமார் 7 மணி அளவில் வீட்டின் முகப்பு வரண்டாவில் அமர்ந்து தான் அப்பா வாங்கி கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருந்த நிலையில் சௌமியா காணவில்லை.சாப்பிட்ட தட்டு,போட்டு இருந்த செருப்பு, கைபேசி என அனைத்தும் அதே இடத்தில் தான் இருந்துள்ளது. சௌமியாவின் தந்தை சிறிது நேரம் கழித்து சௌமியாவிற்கு போன் பண்ணி இருக்கிறார், ஆனால் போன் மணி அடித்தாலும் சௌமியா போனை எடுத்து பேசவில்லை? உடனே அக்கம் பக்கத்திற்கு தகவல் தெரிவித்து அனைவரும் தேடிப் பார்த்திருக்கிறார்கள் சௌமியாவை எங்கேயும் காண முடியவில்லை? இரவு முழுவதும் எல்லா இடங்களிலும் தேடி இருக்கிறார்கள்? சௌமியா சடலமாக கண்டெடுக்கப்பட்ட கிணற்றிலும் லைட் அடித்து தேடி இருக்கிறார்கள்? ஆனால் அங்கும் இல்லை மறுநாள் தன் மகள் காணவில்லை என்பது தொடர்பாக வடகாடு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுப்பதற்காக ரமேஷ் சென்றிருக்கிறார்.காவல் ஆய்வாளர் தனபால் காவல் நிலையத்தில் இல்லை.அவர் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.அந்த இடத்திற்கு சென்று ரமேஷ் புகார் மனுவை கொடுத்துவிட்டு 5000(ஐந்தாயிரம்) பணத்தையும் கொடுத்திருக்கிறார். இதை செலவுக்கு வச்சுக்கிட்டு என் மகளை வேகமா தேடி கண்டுபிடிங்க சார் என கெஞ்சி இருக்கிறார்..
காவல்துறை விசாரணையில் கள்ளர் சமூகத்தை சார்ந்த அதே ஊரில் உள்ள மணிகண்டன் என்பவரை நாங்கள் சந்தேகிக்கிறோம் ? என சௌமியாவின் அப்பா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.26-12-2024 அன்று மாலை ரமேஷை விசாரிக்க வேண்டும் நீங்கள் உடனே காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என காவல் ஆய்வாளர் தனபால் அழைத்ததின் பேரில் ரமேஷ் காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார். அப்பொழுது மணிகண்டனும் காவல் நிலையத்தில் இருந்திருக்கிறார்.மணிகண்டனும் காவல் ஆய்வாளர் தனபாலும் ‘’உன் மகள் எங்கேயாவது கிணற்றில் கிடப்பாள் நல்லா தேடிப்பார் என இருவரும் ஒருமித்த குரலில் சொன்னது தான். மறுநாள் இதற்கான சந்தேகத்தை பலருக்கும் எழுப்பி இருக்கிறது.
மறுநாள் 27-12-2024 தேதி அதிகாலையில் இரண்டு நாள் தேடிய அதே கிணற்றில் பிணமாக கிடந்தார் சௌமியா. பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கரம்பக்குடி தீயணைப்புத்துறையினர் உடலை எடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி உள்ளார்கள். சௌமியாவின் உடலை அவங்க பெற்றோர்கள் பார்ப்பதற்கும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை? பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு மருத்துவர்களும் உடலை பார்ப்பதற்கும் அனுமதிக்கவில்லை ? பிணவறைக்கு உடலை தூக்கி எடுக்க சென்ற உறவினர் ஒருவர் மறைமுகமாக எடுத்த போட்டோ தான் உறவினர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.காவல்துறை சொல்லுவது போல் இது தற்கொலை அல்ல,இது திட்டமிட்ட படுகொலை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்? சௌமியாவின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது? என் மகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளார்கள் அவர்களை கைது செய்ய வேண்டும் என ரமேஷ் சொன்ன தகவலை அடுத்து 28-12-2024 தேதி மறுநாள் வெள்ளாஞ்செட்டியார் சங்கத்தின் சார்பாக சௌமியாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.
இதில் திமுக கரம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ. பாஞ்சாலனின் பங்கு என்னவென்றால்? குற்றம் சாட்டப்படும் மணிகண்டன் அவர் உடன் பங்காளி. இது படுகொலை அல்ல தற்கொலை தான் என சமாதானம் பேசி விரைந்து உடலை எடுத்துச் சென்று எரிப்பதற்கு மிகத் தீவிரம் காட்டியிருக்கிறார் தவ பாஞ்சாலன். தவ பாஞ்சாலன் நடந்து கொண்ட விதமும் செயல்பாடுகளும் அனைவருக்கும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செட்டியார் சமூகமாக இருந்தாலும், தவ பாஞ்சாலன் சொல்வதை தான் அவர் கேட்பார் ஏனென்றால்? ரகுபதிக்கு லீகல்- இல்லீகள் அனைத்தையும் செய்து கொடுப்பது பாஞ்சாலன் தான் என கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற துரை குணாவிடம் பேசினோம்..
எனது மகள் சௌமியாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்துள்ளார்கள்? இதை காவல்துறையும், மருத்துவ துறையும் எங்களிடம் மறைக்கிறது எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என சௌமியாவின் பெற்றோர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். நான் இத் தகவலை மக்கள் கண்காணிப்பாக இயக்குனரும் மூத்த வழக்கறிஞருமான தோழர் ஹேன்றி டிபன் அவர்களிடம் தகவலை தெரிவித்தேன். 02-01-2025 தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் .
மறுநாள் 03-01-2025 தேதியன்று விசாரணைக்கு வந்தது, விசாரணையில் சௌமியாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு ஒரு மருத்துவ குழுவை நீதிமன்றமே நியமனம் செய்தது. அதன் அடிப்படையில் 04-01-2025 தேதி அன்று உடலை மறு பிரேத பரிசோதனை செய்து உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்கள்.
இதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்னவென்றால், வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருப்பதால் நான் அது குறித்து பேசப்போவதில்லை.அப்படி பேசினால் அது சட்டத்திற்கு உகந்ததாக இருக்காது. நான் சொல்லுவது சாதாரண அடிப்படை தான். சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் உள்ள மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, மருத்துவக் கல்லூரி முதல்வர், சௌமியாவின் உடலை உடல் கூராய்வு செய்த மருத்துவர் கார்த்திகா தேவி என அனைவரும் பெண்கள் தான். 20 -வயது மதிக்கத்தக்க தன் கல்லூரியில் நேற்று வரை படித்த சக மாணவி தற்கொலை செய்து கொண்டால் கூட ? அதை கண்டுபிடிக்கக்கூடிய பொறுப்பும், காரணமும் அவர்களுக்கு இல்லையா ? நான் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைவாணியிடம் பேசினேன்.சௌமியாவின் அப்பா தனது மகளை கூட்டுப் பாலியல் சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளார்கள் எனத் தொடர்ந்து கூறி வருகிறார் அது தொடர்பாக ஏன் நீங்கள் சௌமியா உடலில் பாலியல் வன்புணர்வு சம்பந்தமான பரிசோதிக்கவில்லை ? எனக் கேட்டதற்கு அப்படி ஒரு ஆய்வை மேற்கொள்ள காவல் ஆய்வாளர் எங்களிடம் சொல்லவில்லை என்கிறார்? ஆக அனைத்து உடல் கூராய்வுகளும் காவல்துறை உத்தரவின் பேரில்தான் நடக்கிறதா? காவல்துறை என்ன மருத்துவம் படித்தவர்களா? அல்லது நீங்கள் காவல்துறை சொல்லும்படி வேலை செய்பவர்களா ?
இந்த வழக்கு திசை மாறியதற்கு பிஜேபி அண்ணாமலை தான் காரணம்?
அண்ணாமலை தன் x வலைதளத்தில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப்போச்சு கருக்காக்குறிச்சி நர்சிங் கல்லூரி மாணவி சௌமியா பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். என செய்தி போட்டதும்,அந்த செய்திக்கு பதில் சொல்லும் விதமாக அவசரக்கதியில் போஸ்ட்மார்ட்டம் செய்து அந்த அறிக்கையை அப்போதைய மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே, மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படவில்லை என சமூக வலைதளத்தில் மாவட்ட காவல் துறை மூலம் அறிக்கை வெளியிட்டார்.
8-அடி மட்டும் தண்ணீர் தேங்கியுள்ள 70 அடி கிணற்றில், சௌமியா விழுந்து தற்கொலை செய்து கொண்டார், அவர் உடலில் வெளி காயம், உள் காயம் ஏதுமில்லை என அறிக்கை வெளியிட்ட மருத்துவத்துறையும், மாவட்ட காவல் துறையையும் நாங்கள் ஆச்சர்யத்துடன் நம்புகிறோம். ஆனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதா? என்பது குறித்த பரிசோதனையை மேற்கொள்ளாமல் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை தான் ஓராயிரம் கேள்விகளை எழுப்புகிறது? வருகின்ற 23-01-2025 அன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகின்றது. பிறகு விரிவாக பார்ப்போம்…