அலைகடலின் ஓரத்தில்
அண்ணா படுத்திருக்க
அருகினில் கலைஞரும்
அமைதியாய் படுத்திருக்க
தலைவர் இருவருக்கும்
தாய்நாட்டு பற்றுமிகும்
தமிழகம் தலைகுனிந்து
தள்ளாடும் நிலையறிந்து
தங்கமகன் தளபதி
தலைமையேற்க வேண்டுமென்று
வெற்றிவாகை சூடவைத்தார்
வியந்தது தமிழகமே
தந்தைவழி அரசாட்சி
தமிழகம் தலைநிமிர
எந்தவினை வந்தாலும்
எதிர்கொள்ளும் திறனுண்டு
சிந்தனை சிற்பியே
சீர்திருத்த செம்மலே
சீலமிகும் தளபதிக்கு
ஞாலமெல்லாம் பாராட்டு
தமிழகத்தின் தனித் தலைவர்
தங்கநிகர் தளபதியாம்
தென்னகத்தின் பெருநிதியாம்
திருக்குவளை அவர்பதியாம்
கண்ணியம் கடமையென்று
கட்டுப்பாடு மூன்றுங்கொண்டு
கழகத்தின் கொள்கைகுன்று
காட்சியிலே எளிமையுண்டு
தென்னாட்டுக் காந்திமொழி
சன்மார்க்க தியாகவழி
எந்நாளும் மறப்பதில்லை
இல்லையினி ஊழல் தொல்லை
கோட்டையிலே கொடிபறக்கும்
கோலமயில் நடனமாடும்
கோமகன் நின்றிருப்பார்
குமரன் முருகனைப் போல்
அனிச்சமலர் தூவி
அன்னையினம் வாழ்த்து சொல்லும்
வேட்டையாடும் குள்ளநரி கூட்டமதை பார்த்திருக்கும்
எத்தனையோ விண்மீன்கள் வானில் பூத்தும்
இருளகற்ற முடியாமற் றவித்தாற் போலே
நித்தமொரு ஊழலைத்தான் கேட்டோம் நாட்டின்
நிருவாகம் முறையோடு இல்லை பாவம்
பத்தாண்டு அரசோச்ச மக்கள் வாழ்வில்
பயன்பெற்று வாழ்வுயர வழியே இல்லை
அத்தனையும் தலைவா நீ அறிந்ததாலே
அகலாது அரசோச்ச வேண்டும் யானோ
புத்தியிலே சிறியவன்தான் நின்னைப் புகழ
புவிமீதுத் தமிழ்ப்போலே யாண்டும் வாழி
– சி.அடைக்கலம்
நெய்வேலி வடபாதி
பள்ளத்தான் மனை.