புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் அனைத்து உட்கோட்டங்களில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து பாய்ஸ் கிளப் என்ற அமைப்பினை மீண்டும் உருவாக்கி புதுப்பித்து உள்ளார்கள்.
மேலும் இதன் மூலம் கொரோனா காலத்தில் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்கள். மேலும் தேவையான விளையாட்டு உபகரணங்கள், கல்வியறிவினை மேம்படுத்தும் வகையில் சிறந்த புத்தகங்கள் போன்றவை காவல் நிலையம் மூலம் வழங்கி வருகின்றனர்.
பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளின் பாதுகாப்பு பற்றியும், கொரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.