தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டயங்காடு ஊராட்சி ஸ்ரீ காங்குளம் விநாயகர் ஆலயத்தை சுற்றி உள்ள குளக்கரையில் தென்னங் கன்றுகள் நடும் விழா கட்டயங்காடு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார், தென்னங்கன்றுகள் நட்டு விழாவினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் விஜயராணி மணிமுத்து மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.