எனது பெயர் பெ.மணிமாறன், நான் தற்போது உதவி ஆய்வாளராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.
பெற்றோர் : தந்தை – ப.பெரியசாமி, தயார் – சின்னக்கண்ணு
பிறந்த தேதி : 20-05-1983
சொந்த ஊர் : நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், வெள்ளக்கல்பட்டி என்கிற கிராமமாகும்.
குடும்பம் : மனைவி – சத்யா மணிமாறன், மகள் – ம.கவின்மதி, மகன் – ம.இனியவன்
படிப்பு : M.Sc. ( விலங்கியல் பட்டதாரி)
விஞ்ஞானி ஆவதற்கு ஆசைப்பட்டு பிறகு குடும்ப வறுமையின் காரணமாக பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 04.01.2006 – ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்ச்சி பெற்று 2007-2009 வரை வீராபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையான 3 வது அணியில் பணியாற்றினேன். 2009&2011 வரை சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் பணியாற்றி பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 02.02.2011 நேரடி உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெற்றேன், 2012&2015 வரை கோவை மாநகரக்காவல் ஆயுதப்படையில் பணியாற்றினேன், பல கசப்பான சம்பவங்களுக்கு பிறகு 2015 – ஆம் ஆண்டு சென்னை மாநகரக்காவல் ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் பெற்றேன், 2016&2019 வரை குரோம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றினேன், அதன் பிறகு இடமாற்றம் செய்யப்பட்டு 2020 முதல் தற்போது வரை செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன்…
கற்றது கடுகளவு கல்லாதது கடலளவு, எதையும் சொல்லாதே செய்து காட்டு, சாதிக்க நினை ஜாதி தீயிணை அணை என்பதே எனது குறிக்கோள் ஆகும்…
சமூகப்பற்றாளன் ஞானசித்தன் என்பது எனது புனைப்பெயராகும். பத்தோடு பதினொன்றாக போகாமல், சராசரி மனிதனாக தன்பெண்டு, தன் பிள்ளையென வாழாமல் எதிலுமே தனித்துவத்தோடு இருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவன் நான்… அந்த வகையில் நாள்தோறும் நம்பிக்கை தரும் தன்னம்பிக்கை கவிதைகள், இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் வரலாற்றில் இன்று என்ற தலைப்பில் நாள்தோறும் நல்ல தகவலை பலபேருக்கு பகிர்ந்து வருகின்றேன்….
மேலும் அன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும், அன்றைய தினத்தில் பிறந்த இறந்த சமூகமேன்மைக்காக வாழ்ந்து வரலாறு படைத்த சாதனையாளர்களின் வாழ்க்கை பற்றி தினமொரு பயனுள்ள தகவல் என்கிற கட்டுரை எழுதிவருகின்றேன்…
எழுதிய புத்தகங்கள் : 1) வானம் உன் கையில், 2) சொற்களால் என்னை அடிக்காதே, 3) உனக்குத்தான் என் இதயம், 4) காலத்தை வென்றவர்கள்
குறும்படங்கள் : 1) கடமை, 2) கல்லுக்குள் ஈரம், 3) வேகம் Vs விவேகம்
எழுதி பாடிய விழிப்புணர்வு பாடல்கள்
1) ட்ராஃபிக் ரூல்ச பாலேவ் பண்ணுங்க
2) ஊரை விட்டு ஊரு வந்து கொரோனா நோயை பரப்பாதீங்க
3) கொடுத்ததெல்லாம் கொடுத்தான் சீனா யாருக்காக கொடுத்தான்
4) சாதிக்க நினை ஜாதி தீயிணை அணை நீயும் நானும் ஒன்னுதான் செத்தா ஆவது மண்ணுதான்
5) ஓட்டுப் போடுங்க நீங்க ஓட்டுப் போங்க உங்க ஜனநாயக கடமையாற்ற மறக்காதீங்க
6) வொய் திஸ் கொரோனா நோயி பரவுதுங்க…
தெரிந்த மொழிகள்
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி
மாத இதழ்களில் படைப்புகள்
ஆளுமைச்சிற்பி மாத இதழில் காலத்தை வென்றவர்கள் என்கிற தன்னம்பிக்கை தொடர் முடிந்து, தற்போது உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் தன்னம்பிக்கை தொடரானது தொடருகிறது, மேலும் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழ், வெற்றிச் சரித்திரம் மாத இதழ், கல்வி டுடே மாத இதழ்களில் கவிதை, கட்டுரை, பாடல்கள் பலமுறை பிரசுரம் ஆகியுள்ளது….
நான் காணும் கனவு
இந்திய தேசத்தில் ஜாதி மத மோதல்கள் இல்லாமல், ஆணவ படுகொலைகள் நிகழாமல், இனப்பாகுபாடு இல்லாமல் மனிதனை மனிதனாக மதித்து திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் முன்னுரிமை தர வேண்டும்,
ஜாதிகளை ஒழித்து இட ஒதுக்கீடு இல்லாமல் திறமையின் அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுமே போட்டி போட்டு அரசு வேலை பெற வேண்டும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதேயாகும்…