தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் போக்கிரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 23.09.2021 ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்கிரிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு உட்கோட்ட தனிப்படையும்,ஒவ்வொரு காவல் நிலையத்தில் தனிப்படைகளும், அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.இந்த சிறப்பு தேடுதல் வேட்டையில் போக்கிரிகளின் இருப்பிடங்கள் தணிக்கை செய்யப்பட்டது.அதில் பல போக்கிரிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் பல போக்கிரிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு வருகிறது.சிறப்பாக செயல்பட்டு போக்கிரிகள் கைது செய்த தனிப்படையினர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பண வெகுமதி அளித்து பாராட்டினார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில்..போக்கிரிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர்கள் மீது உரிய சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.