42 சவரன் தங்க நகைகள் மீட்பு J-6 திருவான்மியூர் காவல் குழுவினர் அதிரடி..
சென்னை, பெசன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் 18.08.2021 அன்று அவரது வீட்டை பூட்டிவிட்டு, மகள் வீட்டிற்கு சென்று மறுநாள் (19.08.2021) காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் வைத்திருந்த 42 லு சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. மேற்படி சம்பவம் குறித்து ஹரி J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தெற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், அடையார் காவல் துணை ஆணையாளர் அவர்களின் மேற்பார்வையில், தரமணி சரகம் காவல் உதவி ஆணையாளர் ஜீவானந்தம் அவர்களின் வழிகாட்டுதலின் மூலமும், திருவான்மியூர் காவல் நிலைய ச-ஒ ஆய்வாளர் ராமசுந்தரம் மற்றும் சாஸ்திரி நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜாராம் அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் தலைமை காவலர்கள் மகேஷ், ஐசக், வேளச்சேரி ஜே7 தலைமைக் காவலர் தாமோதரன், ரஞ்சித் ஆகியோர் அடங்கிய தனிப்படை குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவ இடத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி புகார்தாரர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மலர்மன்னன் (எ) மாணிக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 42 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.