தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் சிறந்த முறையில் சேவை செய்கின்றார்கள். 100 சதவீதம் சுகப் பிரசவத்திற்கு முயற்சி செய்கின்றார்கள். கடைநிலை ஊழியர்கள் முதல் நிர்வாக தலைமை மருத்துவர்கள் வரை சிறப்பாக, தன்னலம் கருதாமல் சேவை நோக்கத்தில் செயல்படுகின்றார்கள்.
முன்பெல்லாம் அதிக கர்ப்பிணி பெண்கள் தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதற்கு பிரைவேட் வாகனங்கள் பிடிப்பதிலும் சிரமம் ஏற்படும். கால தாமதமாகும். இப்போது அப்படி இல்லை. எவ்வளவு சிக்கலாக இருந்தாலும், இங்கேயே அறுவை சிகிச்சைகள் மூலம் பிரசவம் பார்த்து விடுகின்றார்கள்.
தனியார் மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அதேபோல மற்ற அவசர சிகிச்சை பிரிவில் எவ்வளவு நோயாளிகள் வந்தாலும் ஒன்று, இரண்டை தஞ்சைக்கு அனுப்பினாலும் அதிகபட்சம் இங்கேயே சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படுகின்றது.
அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என போட்டி போட்டு, காலை, மதியம், இரவு என இலவச உணவுகள் வழங்குகின்றார்கள். ஒரு சிலரை தவிர 90 சதவீத தாய்மார்கள் உணவை வாங்கி சாப்பிடுகின்றனர். மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள், மருத்துவமனை பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பட்டுக்கோட்டையை சுற்றி சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஊர்மக்களில் ஒருவர் ‘27.11.21-&ம் தேதி சனிக்கிழமை மருத்துமனைக்கு வந்தோரை பிரசவத்திற்கு அனுமதித்தார்கள். 28&ம் தேதி மயக்க டாக்டரை பார்க்க சொன்னார்கள். அப்போதே எனக்கு அறுவை சிகிச்சைதான் செய்ய போகிறார்கள் என்ற பயம் வந்து விட்டது. பிரஷரும் ஏறிவிட்டது. ஆனால் திங்கள் கிழமை 29&ம் தேதி 12.15 மணிக்கு பகலில் எனக்கு சுகபிரசவம் ஆனது. என் உடல்வாகுக்கும், எனது உடல் எடைக்கும் கண்டிப்பாக அறுவை சிகிச்சைதான் நடக்கும் என்று எண்ணிய எனக்கு, சுகபிரசவம் நடந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போதே மருத்துவச் செவிலியர்களை பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. திங்கள் அன்று பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பெயர்கள் எனக்கு தெரியவில்லை. அவர்களை நான் கடவுளாக பார்க்கின்றேன். என் வாழ் நாட்களில் மறக்க முடியாத நபர்கள். அவர்கள் மட்டும் அல்லாது அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரையும், எனது சார்பாகவும், எங்கள் குடும்ப சார்பாகவும், பயன் பெற்ற அனைத்து கர்ப்பிணிகள், தாய்மார்கள் என அனைவரின் சார்பாகவும் மனதார பாராட்டுகின்றேன்.
& R.N.S.சுரேகா சாந்தி, ஒட்டங்காடு