S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் சேர்ந்து பெரும்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால்,இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவமழையினால் சென்னை பெருநகரில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில், காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னை பெருநகரகாவல் மீட்பு குழுவினர் (GCPRT) மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர் திரு.பிராங்க்ளின் டி ரூபன் மேற்பார்வையில், S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மகுடீஸ்வரி தலைமையில், காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் (GCPRT), பெரும்பாக்கம், எழில்நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு, தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும், இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு பால், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.