தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை வழங்குதல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏராளமான ஏழை எளிய மக்கள் முதல்வர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள். புதிதாக காப்பீடு அட்டை, அவசர கால சிகிச்சை பெறுவோர் என தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அங்குள்ள அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
குறிப்பாக அங்கு ஒருங்கிணைப்பாளராக உள்ள மணிகண்டன் என்பவர் அங்கு வரும் பொதுமக்களின் காப்பீடு குறித்து சந்தேகங்களுக்கு முழுமையாக விளக்கம் அளித்து மருத்துவ காப்பீடு பெற வழிக்காட்டி வருவது பாராட்டுக்குறியது. அது அவரது பணியாக இருந்தாலும் அங்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் பணியை மணிகண்டன் அவர்கள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 26.11.21 அன்று கொட்டும் மழையில் மின்சாரம் இல்லாத நேரத்திலும் செல்போன் விளக்கு வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்து தேவையான பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி வந்தனர்.
சிறப்பாக செயல்படுபவர்களை பாரட்ட வேண்டும். தீதும் நன்றும் பகிர்தலே பத்திரிகை தர்மம் என்கின்ற வகையில் மணிகண்டன் அவர்களுக்கு பாராட்டுகள்.
பாராட்டுதல் அவரது சேவையை மேலும் உற்சாகப்படுத்தும் என்பதால் நீங்களும் பாராட்ட நினைத்தால் அவர் அலைபேசி எண்: 9786978698