கோவை மாவட்டம், செட்டிபாளையம் சந்திப்பின் அருகே உள்ள கிஜிவி இயந்திரத்தில் இரவு 9 மணியளவில் போலியான சாவியை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயன்ற ஹரியானாவை சேர்ந்த கலித் (வயது-30) மற்றும் சக்கீள் (வயது-20) ஆகிய இருவரையும் அந்த வங்கியின் கட்டுப்பாட்டறை மூலம் பெறப்பட்ட எச்சரிக்கை தகவலின் பேரில் தாமதமின்றி 15 நிமிடத்திற்குள் விரைந்து சென்று கொள்ளைச் சம்பவம் நடவாமல் தடுத்த செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்களை பாராட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.எம்.எஸ்.முத்துசாமி இ.காப,. அவர்கள் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப,. அவர்கள் 30.11.2021 அன்று, திறன்பட செயல்பட்ட காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்கள்.