நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழ் நிருபர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது.
நீதியின் நுண்ணறிவு ஆசிரியர் R.சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் மூத்த பத்திரிகையாளரும் தூய்மை பாரதம் ஒருங்கிணைப்பாளர் திரு.V.S.ராமன் அவர்கள் கலந்துக் கொண்டு நீதியின் நுண்ணறிவு நிருபர்களுக்கு தங்களது திறனை மேம்படுத்தும் விதமாக ஆலோசனைகள் வழங்கினார். பீப்பிள் டுடே ஆசிரியர் திரு.G.சத்தியநாராயணன் அவர்களும் நிருபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் நமது நகரம் ஆசிரியர் எஸ்.சரவணன் அவர்கள் கலந்துக்கொண்டார்.