தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சியில் தலைவராக இருக்கும் ராஜாக்கண்ணு மீது நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழில் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து மாதாமாதம் வெளிவருகிறது. குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்களும் உள்ளது.
1.ஓட்டுக்கு 500 வீதம் பணம் லஞ்சமாக கொடுத்து சுமார் 30 லட்சம் வரை பணம் கொடுத்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் தேர்தல் கமிசனுக்கு புகார் அனுப்பினார். நடவடிக்கை இல்லை. மக்களிடத்தில் விசாரிக்கவும் இல்லை.
- நவக்கொல்லைகாடு பிள்ளையார் குளத்தில் மண்வெட்டி கட்டையன்காடு சாலையில் நவக்கொல்லைக்காடு சசிகுமார் என்பவரது வயலுக்கும் மற்றும் 10 நபர்களுக்கு 1000 நடை மண் ரூ 400 வீதம் சுமார் 4 லட்சம் வரை மண் திருட்டு நடைபெற்றதாக ஊழல் குற்றச்சாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் என்ற தலைப்பில் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தோம். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
- நல்லமான் புஞ்சை ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயானத்தை இடித்துவிட்டு ஊராட்சி மன்ற தலைவரின் சொந்த பயன்பாட்டிற்கு சாலை அமைத்துள்ளார் என்றும், ஊமச்சி புஞ்சை அங்கன்வாடியை இடித்து அந்த மண் முழுவதையும் வயல்களில் கொட்டி சாலை அமைத்துள்ளார் என்று நமது இதழில் வெளியிட்டிருந்தோம். (சொந்தபயன்பாட்டிற்கு சாலை அமைக்கும் ஊராட்சி தலைவர் என்ற தலைப்பில்) நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
- நல்லமான் புஞ்சை சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நில ஆக்கிரமிப்பு செய்து ரோடு போட்டுள்ளார். ஙிஜிளி வரை புகார் கொடுத்து நடவடிக்கை இல்லை.
- ஒட்டங்காடு சத்திரக்குளம் கரையில் கொட்டகை அமைத்துள்ளார்கள். வாகன ஓட்டிகள் அந்த வாகன சங்கம் பதிவு இல்லாதது. அந்த கொட்டகையை அகற்ற சொல்லி நுண்ணறிவு வெளியிட்டு இருந்தோம். ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் அவசரமாக ரசீது போட்டு மின் இணைப்பு வரை கொடுத்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
- பொதுமக்கள் தலைவரிடம் எதை கேட்டாலும் எனக்கு தெரியாது. உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று மக்களிடம் கோபமாக திட்டுகின்றார் என்று சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை.
- ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் மீது பல லட்சம் ரூபாய் எடுத்துவிட்டு எந்த வேலையும் நடக்கவில்லை என்றும் கடந்த தீபாவளிக்கு, வாட்டர் டேங் ஆபரேட்டர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யூனியனில் பணிபுரியும் அலுவலர்கள் தனது கட்சிகாரர்கள். பஞ்சாயத்து அலுவலகத்தில் பினாமியாக பணிபுரியும் பணியாளர்கள் என அனைவருக்கும் போனஸ் கொடுக்க வேண்டும். எனவே 5 லட்சம் பணம் எடுக்க வேண்டும் என்று துணை தலைவரை மிரட்டி காசோலையில் கையெடுத்து கேட்டுள்ளார் தலைவர். இந்த குற்றத்துக்கு உடந்தை போகாமல் துணை தலைவர் மாவட்ட ஆட்சி தலைவர் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
- ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி சுமார் 10 நபர்களை நியமித்து ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்று 15 நாட்கள் சுமார் 7000 நபர்கள் வரை பதிவு செய்தார்கள். ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது, யாருக்கு பதிவு செய்ய பணம் இல்லை என்று தலைவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். பதிவு முடிந்து 10 நாட்கள் கழித்து 1 கார்டுக்கு 100 ரூபாய் வீதம் சுமார் 6.50 லட்சம் வரை வசூல் செய்துள்ளார்கள். மக்களிடத்தில் மிகப்பெரிய மோசடியை செய்து நூதன முறையில் பல லட்சங்களை மோசடி செய்ததாக தலைவரை பற்றி நுண்ணறிவு பத்திரிகையில் செய்தி வந்தது. மக்களும் கொந்தளித்தார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை.
- ஊராட்சி துணை தலைவர் மீது தலைவரும், தலைவர் மீது துணை தலைவரும் புகார் கொடுத்து ஊராட்சியில் முக்கிய நபர்கள் மூலமாக பஞ்சாயத்து பேசி ஊழல் செய்யும் தொகையில் 6 சதவிகிதம் தலைவருக்கும், 4 சதவிகிதம் துணை தலைவருக்கும் என்று ஊராட்சி செயலாளர் முன்னிலையில் பஞ்சாயத்து முடிக்கப்பட்டது. இருவரும் ஒரு தொகையை ஊராட்சி செயலாளருக்கு கொடுத்து விடுவது என்று முடிக்கப்பட்ட செய்தி கடந்த மாத நீதியின் நுண்ணறிவு மாத இதழில் வெளிவந்தது எந்த நடவடிக்கையும் இல்லை.
ஒரு ஊராட்சி மன்ற தலைவர் தான் ஆளும்கட்சி உங்களால் என்ன செய்ய முடியும் என்று பலரிடம் மிரட்டுகின்றார் என்று மக்களில் சிலர் கொந்தளிக்கின்றார்கள். 12 வார்டில் உள்ளவர்களில் 2, 3 பேரை தவிர யாரும் தலைவரோடு பேசுவதே இல்லை. ஒரு ஊராட்சி பெண் உறுப்பினர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வருவதே இல்லை. அஞ்சம்மாள் என்ற உறுப்பினரின் கணவர் நாகராஜ் தான் கையெழுத்தை போடுகிறார். இந்த கையெழுத்தை ஆள்மாறாட்டம் செய்வதும் மோசடி கையெழுத்தையும் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையிலும், ஊராட்சி செயலாளர் முன்னிலையிலும் சுமார் 20 மாதங்களாக செய்து வருகின்றார்.
எனவே ஐயா அவர்கள் மேற்கண்ட குற்றங்களையும் ஆள்மாறாட்ட மோசடிக்கு உடந்தையாகும் குற்றத்தையும் பாக்கி உள்ள உறுப்பினர்களிடம் விசாரணை செய்ய வேண்டியும், முன் பட்டியலிடப்பட்ட குற்றங்களை மக்களிடம் விசாரணை செய்தும், என்னை ஒன்றுமே செய்ய முடியாது நான் ஆளும் கட்சி, அதையும் மீது என்னிடம் எதுவும் கேட்டால் நான் PCR கேஸ் போட்டு விடுவேன் என்று மிரட்டுவதால் பயந்து எங்கள் பெயரை குறிப்பிட பயந்து பெயரை எழுதவில்லை. அவர் செய்யும் அராஜகங்களையும், மோசடிகளையும், ஊழல்களையும் ஆள் மாறாட்ட குற்றங்களையும் தீண்டாமை புகாருக்கு பயந்து கேட்க முடியாமல் மனவேதனையோடு எழுதுகின்றோம். நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் ஒட்டங்காடு ஊராட்சி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.