தஞ்சை மாவட்டம்,, பேராவூரணி அருகேயுள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு ப்ளஸ் டூ பயின்ற மாணவர்கள் 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வாகி உள்ளனர்.
குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வி.பிரவீன்குமார், எம்.ஆகாஷ், ஆர்.ஆரிஸ் ராஜ், மாணவிகள் ஏ.ஐஸ்வரியா, எம்.அப்சரா ஆகியோர் பிஎஸ்சி அக்ரி பட்டப்படிப்புக்கும், பி.பூவிதா அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பிஎஸ்சி ஹார்ட்டிகல்ச்சர் பட்டப்படிப்புக்கும் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வாகி உள்ள ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பான முறையில் செயல்பட்ட தலைமையாசிரியர் வீ.மனோகரன் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச் செல்வம் சால்வை அணிவித்து பாராட்டினார்.