புதுக்கோட்டையில் மகளிர் சுய உதவிக்குழுக் கூட்டமைப்புகளுக்கு, ரூ.1.65 கோடி மதிப்பில் வங்கி பெருங்கடன் வழங்குவதற்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கவிநாடு கிழக்கு ஊராட்சி கூட்டமைப்புக்கு ரூ.40 லட்சம், எம். குளவாய்ப்பட்டி ஊராட்சி கூட்டமைப்புக்கு ரூ.40 லட்சம், வண்ணாரப்பட்டி ஊராட்சி கூட்டமைப்புக்கு ரூ.40 லட்சம், புதுமைப் பெண்கள் பகுதி கூட்டமைப்புக்கு ரூ.45 லட்சம் என மொத்தம் 4 கூட்டமைப்புகளுக்கு ரூ.1.65 கோடி மதிப்பிலான வங்கி பெருங்கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, எஸ்பிஐ வங்கியின் தஞ்சாவூர் மண்டல மேலாளர் ஆல்வின் மார்டின் ஜோசப், புதுக்கோட்டை முதுநிலை மேலாளர் பிரியா மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.