கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.