தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளில் மின்சார கசிவு காரணமாக உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காக மின்சார வாரியம் முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துறை தற்போது நவீனமயமாகி வருகிறது. மின்வாரியத்துறையில் பல புதிய விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டு வருகின்றன. உதாரணமாக தமிழ்நாடு முழுக்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான சிறப்பு முகாம்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளில் மின்சார கசிவு காரணமாக உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காக மின்சார வாரியம் முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மின் கசிவு, ஓவர் ஓல்டேஜ் காரணமாக சமயங்களில் மின்சாரம் தொடர்பான விபத்துகள் ஏற்படும். ஓவர் ஓல்டேஜ் காரணமாக திடீரென மின் வயர்கள் தீ பற்றி வீடுகள் பற்றி எரியும் வாய்ப்புகள் உள்ளன. சில இடங்களில் மின் கசிவு ஏற்பட்டு தொழிற்சாலைகள் பற்றி எரியும் வாய்ப்புகளும் உள்ளன. தமிழ்நாட்டில் நடக்கும் பெரும்பாலான தீ விபத்துகளுக்கு மின் கசிவு முக்கியமான காரணம் ஆகும். இதற்கு பழைய வயர்கள், சரியாக கனெக்சன் கொடுக்காதது என்று பல காரணங்கள் உள்ளன.
வீட்டில் இது போன்ற விபத்துகள் ஏற்பட இன்னொரு காரணமும் உள்ளது. அவை ட்ரிப்பர்கள் இல்லாமல் இருக்கும் வீடுகள் நிறைய உள்ளன. பொதுவாக வீட்டிற்கு திடீரென ஹை ஓல்டேஜ் மின்சாரம் வந்தால், இந்த ட்ரிப்பர்கள் தானாக ஆப் ஆகி, வீட்டில் உள்ள பொருட்களை காக்கும். மின்சாரம் அதிகம் ஆகி விபத்துகளை ஏற்படுத்துவதை இந்த ட்ரிப்பர்கள்தான் காக்கும். இப்போது புதிதாக கட்டப்படும் வீடுகள் அனைத்திலும் இந்த ட்ரிப்பர்கள் வைத்துதான் கட்டுகிறார்கள். ஆனால் பழைய வீடுகளில் இது போன்ற ட்ரிப்பர்கள் வைக்கப்படுவது இல்லை. அப்போது வெறும் பியூஸ் வைப்பதோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் ட்ரிப்பர்கள் அளவிற்கு இது வேகமாக செயல்படாது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் ட்ரிப்பர்கள் வைக்கப்பட வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது. வீடுகள் மட்டுமின்றி அலுவலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என்று அனைத்திலும் ட்ரிப்பர்கள் வைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது. மின் கசிவை தடுக்கவும், அதிக ஓல்டேஜ் காரணமாக மின் சாதன பொருட்கள் சேதம் அடைந்து தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் ட்ரிப்பர்கள் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று மின்சார வாரியம் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது.
இன்னொரு பக்கம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான சிறப்பு முகாம்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பாக அதிகாரிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று போடப்பட்டு உள்ளது. மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. இதற்காக ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் நேரில் முகாம் மூலமும் இணைக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம் கட்டணம் இன்றி இயங்கி வருகிறது. மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க யாரும் பணம் வாங்க கூடாது. அதிகாரிகள் யாரும் மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.