தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நவம்பர் 16 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்தது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கோ.சத்யநாராயணன் வரவேற்புரை நல்க, பொருளாளர் எம்.காமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் ஆகியோர் பத்திரிகையாளர்களின் மூத்த முன்னோடியான மகாகவி பாரதியார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பின்னர் குத்துவிளக்கு ஏற்றி தேசிய பத்திரிகையாளர் தின விழாவை தொடங்கி வைத்தனர். ரூ. 1 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு அட்டை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் ஆகியோர் திருக்கரங்களால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.எழிலன் நாகநாதன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
கலைமாமணி எழுத்து செல்வர் திரு.லேனா தமிழ்வாணன் கருத்தரங்கை (பத்திரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து சட்ட போராளி வழக்கறிஞர் பா.புகழேந்தி, மூத்த பத்திரிகையாளர்கள் நக்கீரன் பிரகாஷ், வி.எஸ்.இராமன், வழக்கறிஞர் தன.சிவசங்கரன், தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் வளர்ச்சி நலச்சங்கத்தின் கௌரவத்தலைவர் D.ஜெபமாணிக்கம் மற்றும் இளைஞர் அணித்தலைவர் K.S.சிலம்பரசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்
பத்திரிகையாளர் நலவாரியம் உள்ளிட்ட பத்திரிகையாளர் நல அறிவிப்புகளுக்கு தமிழக அரசுக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. விழாவில் கலந்துக் கொண்ட அனைத்து பத்திரிகையாளர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்துவிளக்கு ஏற்றி விழா தொடங்கப்பட்டது. செல்வி.ஹாசினி சொக்கலிங்கம் அவர்களின் பரதநாட்டிய நிகழ்வை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். தேநீர் இடைவேளை முடிந்து ராப் பாடகர் தமிழ் அழகனின் பாடலை தொடர்ந்து கருத்தரங்கம் தொடங்கியது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பத்திரிகையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது அதில் பத்திரிகையாளர்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். அக்கருத்தின் அடிப்படையில் பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர், உயர்திரு. செய்தித்துறை இயக்குநர் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவுசெய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு சங்க துணைத்தலைவர் சட்ட கேடயம் பி.ராஜன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.