உலகக் கவிஞர்களில்
உத்தமக் கவி.
மகா கவிகளில்
மனித நேயக்கவி.
பாரதி,
உண்மைக் கவி,
அமர கவி,
உலக மகாகவி
ஷேக்ஸ்பியரை
“மான் திருடி”
என்று
அலட்சியப்
படுத்தியவர்களுண்டு
ஆனால்
பாரதியை
யாரும்
விமர்சிக்கவில்லை.
எல்லோரையும்
கவரும்
எளிய குணம் அவரிடமிருந்தது.
வெறும் 39 ஆண்டுகள் வாழ்ந்த
ஒப்பற்ற கவியின்
உலகப் பார்வை உயர்வானது.
கிறிஸ்தவர்களுக்கு பைபிள்
இஸ்லாமியருக்கு குரான்
கம்யூனிஸ்டுகளுக்கு தாஸ்கேபிடல்
தமிழர்களுக்கு பாரதி பாடல்கள்
என்கிறார் ஜெயகாந்தன்.
பாரதியின் பாடல்களை, ‘The song of songs ‘ எனப் புகழ்கிறார்
தோழர் ஜீவா.
1904-ல் முதல் கவிதை
1921 ல் விண்ணுலகம்
பதினேழு ஆண்டுகளில்
பாரதியைப் போல்
உலகப் புகழ் பெற்றவன்
ஒருவனுமில்லை
என்கிறார் ஜீவா.
பாஞ்சாலி சபதம்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
பகவத்கீதை மொழிபெயர்ப்பு
நான்கும்
ஒரே ஆண்டில்
எழுதப்பட்டது.
பாரதியாரைக்
கொண்டாடதவனுக்கு
தமிழன் என்று
சொல்லிக் கொள்ள
அருகதையில்லை என்கிறார்
கண்ணதாசன்.
இந்திய ஞானிகள்
கணக்குகளுக்கெட்டாத
காலந்தொட்டு
சேகரித்த
நல்வறிவுகளை
புதுப்புது
முறைகளில் பாடி
நாட்டின் நாகரீகம்
காக்க வந்த
ஞானக் களஞ்சியம் பாரதி
என்கிறார் நமக்கல்லார்.
தமிழகம்
தமிழுக்கு
உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித்
தவம் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன்
தோன்றினான்
என்கிறார்
பாவேந்தர் பாரதிதாசன்.
எட்டு மொழிகள்
தெரிந்த பாரதி
தானும்,
தன் வீட்டிலுள்ளோரும்
தமிழைத் தவிர
வேறு பாஷை
பேசச் சம்மதிக்காதிக்காதவர்.
ஆங்கிலத்தில்
அளவற்ற அறிவு
பாரதிக்கு.
“பால பாரதா”
என்ற ஆங்கில
மாத இதழின்
ஆசிரியராக பொறுப்பேற்றபோது
பாரதியின் வயது
இருபத்தி ஐந்து.
11.1.1908 ல்
முதல்
ஆங்கில மேடைப் பேச்சு
10.5.1908 ல்
அரசியல்
ஆங்கில
மேடை பேச்சு.
3.3.1919 ல்
The cult of the eternal’
தலைப்பில்
பாரதியின்
ஆங்கிலப் பேச்சுக்கு
ஒரு ரூபாய்
நுழைவுக் கட்டணம்.
தமிழ்ப் பாடல் பாடியே
ஆங்கிலப் பேச்சை தொடங்குவார்
பாரதி.
மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பாரதி.
அல்லாவைப் பாடியவர்.
1921ல் கும்பகோணம் மகாமகம்.
நண்பர்கள் அழைத்தனர்
போகவில்லை.
புதுவையிலிருந்து
சென்னை திரும்பியம்
விவிலிய வேதத்தை
எளிய தமிழில்
எழுத ஆசைப்பட்டவர் பாரதி.
ஏடும் தெய்வம்
எழுத்தும் தெய்வம்
என்றார் பாரதி.
இன்று (டிசம்பர், 11)
பாரதி பிறந்த நாள்.
இதோ
பாரதி
குதித்து குதித்துப்
பாடுவது
நமக்குக் கேட்கிறது.
ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதரென்பது
இந்தியாவில்
இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ச்சி கூடியே
மனிதர் யாரும் ஒரு நிகர்
சமானமாக வாழ்வமே.
- எம்.எஸ்.முத்துசாமி
கோவை-18