வேலாட வேலாட பகையோடும்
என்றும் பகையோடும் – குறள்
நூலாட நூலாட அறங்கூடும்
வாழ்வில் அறங்கூடும்
கோலாட கோலாட நலங்கூடும்
நாட்டின் நலங்கூடும்
காலாட காலாட கலைகூடும்
பரதகலை கூடும்
பால்காய பால்காய சுவைகூடும்
நாவின் சுவை கூடும்
மலராட மலராட வண்டாடும்
சுவைக்க வண்டாடும்
நிலமாட நிலமாட பயங்கூடும்
மக்கள் பயந்தோடும்
அலைகூட புயல்சேரக் கலமாடும்
கடலில் கலமாடும்
கலமாட கலமாட முகநாடும்
துறைமுகநாடும்
களங்கூட களங்கூட படைகூடும்
போர்ப் படை கூடும்
சிலம்பாட சிலம்பாட கண்ணகி அடிகூடும்
சீரான அடிகூடும்
விலைகூட விலைகூட மனம்வாடும்
மக்கள் துயர்கூடும்
நதியோட நதியோட வளங்கூடும்
நிலத்தின் வளங்கூடும்
கதிராடக் கதிராட பனியோடும்
மொட்டு மலர்ந்தாடும்
மதிகூட மதிகூட விதியோடும்
தலைவிதியோடும்
நிதிகூட நிதிகூட கனங்கூடும்
தலைகனங்கூடும்
முதிர்கூட முதிர்கூட பதரோடும்
நெல்லின் பதரோடும்
சதிகூட சதிகூட தீமைகள் சதிராடும்
தீவிரவாதந் தலைவிரித்தாடும்
வேலாட வேலாட பகையோடும்
என்றும் பகையோடும் – குறள்
நூலாட நூலாட அறங்கூடும்
வாழ்வில் அறங்கூடும்
– சி.அடைக்கலம்,
நெய்வேலி வடபாதி,
பள்ளத்தான்மனை