26.01.2023-ம் தேதி அன்று 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் P.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உடன் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் M.S.முத்துசாமி, இ.கா.ப., வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும் புறாக்களை வானை நோக்கி பறக்க விட்டு பின்பு பாலாஜி, காவல் ஆய்வாளர், வேலூர் ஆயுதப்படை, அவர்களின் தலைமையில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். மேலும் 46 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதக்கமும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆயுதப் படை உட்பட 25 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.