தமிழ் ஈன்றெடுத்த புகழின் புண்ணிமே
தமிழன் கண்டெடுத்த தமிழின் கண்ணியமே
நாவசைத்தால் காவியதமிழில் கவிசுரக்கும் கற்பனையே
நற்றமிழால் கவிமணக்கும் தேன்தமிழின் பொற்றமிழே
வற்றாத தமிழருவியில் முக்குளிக்கும் முத்தமிழே
முகம்மலர சிந்தனையோடு சிரிக்கும் செந்தமிழே
எமுதுகோலை தொட்டாலே எழுந்துவரும் கவிதை
ஏடெல்லாம் எழுதசொல்லி நச்சரிக்கும் உன்மனதை
தாங்கிய தாய்நாட்டை தமிழும் தலைவணங்குகிறது
தழைக்கும் தமிழ்மொழியை தரணியும் புகழ்கிறது
இதயத்தில் நுழைந்து அகிலத்தை ஆளும் இன்பக்கன்னி
இணையத்தில் இணைந்து புலனத்தையாளும் இளையக்கன்னி
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்