சென்னை மாநகராட்சி மண்டலம் 12ல் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வந்த மணிகண்டன் (வயது 38) சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். பொறியாளர் மணிகண்டன் அவர்களுடைய குடும்பத்திற்கு உதவிடும் வகையில் மண்டலம்-12யைச் சார்ந்த பொறியாளர்கள் அனைவரும் இணைந்து மணிகண்டனின் குடும்ப வாழ்வாதார நிதியாக ரூ75,000/- வழங்கப்பட்டது.
நிதி சேகரிப்பில் முனைப்புடன் செயலாற்றிய மண்டலம் 12 உதவி ஆணையர் திரு.பாஸ்கரன் மற்றும் செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,
இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிதி நல்கிய மண்டலம்-12யைச் சார்ந்த பொறியாளர் களுக்கு மாநகராட்சி பொறியாளர் சமூகம் நன்றி பாராட்டுகிறது.