செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு.
2023-2024 ம் ஆண்டுக்கான நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் பத்திரிகையாளர் நலன் சார்ந்த சில திட்டங்களை அறிவிக்க கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கை மனுவை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் எஸ்.சரவணன், பொதுச் செயலாளர் கோ.சத்யநாராயணன், துணைத் தலைவர்கள் பி.ராஜன், ஆர்.சிவகுமார், இணை செயலாளர் எம்.கிருஷ்ணவேணி, அமைப்பு செயலாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் கே.முத்து, நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.ரவி, இளையராஜா உள்ளிட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.