- இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.
- வீட்டிற்குள் நுழையும் முன் கை, கால் கழுவி பிறகு நுழைந்தது.
- மஞ்சள் நீராடி விளையாடியது
- உணவில் மஞ்சள் சேர்த்தது
- சாம்பல் உப்பு கொண்டு பல் துலக்கியது.
- மாட்டுச்சாணம் தெளித்து வாசல் பெருக்கியது. வீட்டின் தரையை மொழுகியது. பிள்ளையார் வைத்தது.
- வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
- மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது.
- பெரிய காரியம் மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது.
- பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.
- நாங்கள் மறந்த மரபுகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் நோய்த்தடுப்பு முறைகளாக இருக்கின்றன. சாமி மேல் பயம் இருந்தவரை இவையெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டன.
- இது நம் முன்னோர்கள் நமக்கு கூறிய மருத்துவம் ஏன்? கிருமிகள்.
இலையில் உண்டால் உப்பில்லாக் களியும் அமிர்தமாய் ருசிக்குமாம். சூடான உணவை இலையில் இட்டு பிசைந்து, அள்ளி அள்ளி சாப்பிடத்தான் நிறைந்ததே வயிரோடு நெஞ்சும். சுகாதாரமாகவும் மருத்துவ குணத்தோடும் இருந்த இவற்றுக்கு மாறாக பிளாஸ்டிக் காகிதத்தால் வயிற்றை நிறைத்துக் கொண்டிருக்கிறோம். வாழை இலையின் தனிச்சுவை காலம் மறந்தவை.
வாழை இலை சாப்பாடு ஏன்?
வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் வாழை இலை ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்க செய்துவிடும். மேலும் வாழை இலையில் உள்ள நார்சத்து பொட்டாசியம், கால்சியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.
அதிலும் விருந்து என்று சொன்னாலே வாழை இலை இல்லாமல் விருந்து நடைப்பெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம் முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் தற்போதைய வேகமான காலத்தில் நாம் வாழை இலையை மறந்து, பல்வேறு டிசைன்களில் தட்டுக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதற்கு முக்கிய காரணம், நம் முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கவில்லை என்பதை விட மறந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழனிடம் தமிழ் பேசுவோம்!
தமிழை நேசிப்போம் !
தமிழில் எழுதுவோம்!
காலம் மறந்தவை தொடரும்..
- பூங்கொடி