பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5ற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ”மக்களைத் தேடி மேயர்” திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பிறப்பு சான்றிதழ் தொடர்பான கோரிக்கை மனுக்களின் மீது மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., , துணை ஆணையாளர்கள் விஷூ மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., (கல்வி), எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), நிலைக்குழுத் தலைவர் (நகரமைப்பு) தா.இளையஅருணா, மண்டலக்குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.