உணவருந்துதற்காக வீட்டிற்கு சென்ற முத்துவிற்கு உணவு தயார் நிலையில் இல்லை என்பதை அறிந்தவுடன் கடுமையான கோபம் வந்தது. பசி மயக்கத்தால் வந்த கோபத்தில் முத்து தனது மனைவியை பார்த்து “இதைவிட வீட்ல வேற என்ன வேலை பார்த்துட்டு இருக்க, மணி என்ன ஆகுது இன்னும் சோறு ரெடி ஆகல. இத்தனை நாளா வெளில சாப்டேன். இன்னைக்காவது வீட்ல சாப்பிடலாம்னு வீட்டுக்கு வந்தா ஏன் இப்படி பண்றீங்க” என்று தன் மகளையும் சேர்த்து திட்டினார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் முத்துவின் கால்கள் தடதடவென நடுக்கத் தொடங்கியது. பசியின் கோரப்பிடியில் சிக்கிய இருந்த முத்து தனது கண்கள் லேசாக இருட்டுவதை உணர்ந்து சோபாவில் பொத்தென்று உட்கார்ந்து கண்களை மூடினார்.
சமையல் கட்டில் இருந்து முத்துவின் மனைவி முத்து திட்டியதால் கோபமடைந்து புலம்ப தொடங்கினார். “நான் தனி மனுஷியா எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்கு. இவ போன், டிவின்னு 24 மணி நேரமும் எதையாவது நோண்டிக்கிட்டே இருக்கா ஒரு வேலையை செய்வோம் ஒரு உதவி செய்வோம் செய்ய மாட்டேங்குறா. நான் என்ன பண்ணி தொலைகிறது. சத்தம் போட்டு சத்தம் போட்டு எனக்கு பீ.பி வந்துரும் போல” என்று புலம்பிக் கொண்டே வேலையை துரிதப்படுத்தினார். சமையல் கட்டில் இருந்து பாத்திரங்கள் தடார்முடார் என்று உருளும் சத்தம் முத்துவை மேலும் எரிச்சல் ஆக்கியது. ஆனால் மிகவும் களைப்பாக இருந்து காது அடைத்து இருந்ததால் முத்து எதுவும் பேச விருப்பம் இல்லாமல் கண்களை மூடியவாரே அயர்ந்து அமர்ந்திருந்தார்.
கைகளில் வாழைப்பழத்துடன் முத்துவின் அருகில் வந்த அமர்ந்த முத்துவின் மகள் “அப்பா” என்று அழைத்தவுடன் கண்களைத் திறந்த முத்துவிற்கு முதலில் தென்பட்ட காட்சி வாழைப்பழம் தான். “இத சாப்பிடுங்கப்பா. தம்பி முட்டை வாங்க போயிருக்கான், சாப்பாடு வெந்துகிட்டு இருக்கு. அஞ்சு நிமிஷத்துல ரெடியாயிடும். தம்பி வந்ததும் நான் உங்களுக்கு தொட்டுக்க செஞ்சி தருகிறேன். அது வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. நீங்க இவ்ளோ சீக்கிரம் வீட்டுக்கு வருவீங்கன்னு எங்களுக்கு தெரியாது. எப்போதும் நீங்க சாயந்திரம் தானே வருவீங்கன்னு அசால்டா இருந்துட்டோம் சாரி பா” என்று தன் மகள் கூறியதைக் கேட்டவுடன் முத்துவின் கோபம் காற்றில் பறந்தது. கைகளில் பழத்தை வாங்கிக் கொண்ட முத்து தன் மகளிடம் “போய் அம்மாவுக்கு உதவி செய்மா” என்று கூறிக் கொண்டிருக்கையில் கடைக்கு போன முத்துவின் மகன் கைகளில் முட்டைகளுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.
“இந்தா தம்பி வந்துட்டான் பா நீங்க போய் கை, கால் கழுவிட்டு வாங்க அதுக்குள்ள சாப்பாடு ரெடி ஆயிடும்” என்று கூறிவிட்டு தனது தம்பியின் கைகளில் இருந்த முட்டையை வாங்கிக்கொண்டு சமையல்கட்டுகள் விரைந்தார் முத்துவின் மகள். மறுமுனையில் தனக்கு வேலை எதுவும் வராத காரணத்தினால் வீட்டில் இருந்த ஜானுக்கு தனது மனைவியுடன் பேசி சிரித்து மகிழ்ச்சியாக நேரம் செலவழிக்க ஏதுவாக இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு தனது கணவர் தன்னுடன் ஆசுவாசமாக அமர்ந்து பேசி சிரித்து நேரம் செலவழித்ததோடு அல்லாமல் சமையலுக்கு காய்கறிகள் நறுக்கி கொடுப்பது என்று ஜான் அன்பை வெளிப்படுத்தியது கிறிஸ்டினாவிற்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தது.
முத்து இறங்கி சென்றதும் அருகில் உள்ள கடையில் உணவருந்தி விட்டு கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற இரு அதிகாரிகளும். சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக சேகரிக்கப்பட்டிருந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டிருந்தபோது “கம் அன் சீ மி இம்மீடியட்லி” என்று அதிகாரிகளில் ஒருவருக்கு கமிஷனரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. “சார் கமிஷனர் அர்ஜெண்டா கூப்பிடுறாரு நான் போயிட்டு வந்துடறேன்” என்று மற்றொரு அதிகாரியிடம் கூறிவிட்டு புறப்பட்ட அந்த அதிகாரி இரண்டு நிமிடத்திற்குள் முதல் தளத்திலிருந்த கமிஷனரின் தனியறை கதவின் முன்பு சென்று நின்றார். கமிஷனரின் உதவியாளரிடம் “சார் கூப்டு இருந்தாங்க நான் காதர்..”என்று கூறிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட உதவியாளர் “சார் உங்களுக்காக வெயிட் பண்றாங்க உள்ள போங்க” என்று கதவை திறந்து விட்டார்.
உள்ளே சென்று கமிஷனர் முன் நின்றதும் விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தார் அந்த அதிகாரி. “வாங்க காதர் உக்காருங்க ஒரு முக்கியமான விஷயம்” என்றார் கமிஷனர். “சொல்லுங்க சார்” என்று கூறிய அந்த அதிகாரியிடம் ஒரு செல்போனை நீட்டிய கமிஷனர் “இதை படிங்க” என்றார். வாங்கி படித்தவுடன் ஆச்சரியத்தில் உறைந்த அந்த அதிகாரி “சார் இதுக்கு வாய்ப்பே இல்லை கண்டிப்பா நாங்க எந்த இடத்திலும் இத பத்தி பேசவே இல்ல, 100% என்னால உறுதியா சொல்ல முடியும்” என்று கமிஷனரிடம் கூறினார். “அப்புறம் எப்படி சார் இந்த நியூஸ் வெளியே போச்சு?” சரி விடுங்க இது நான் பாத்துக்கிறேன், கேசில் என்ன பிராக்ரஸ்?” என்று கேட்ட கமிஷனரிடம் “சார் நமக்கு ஒரு நியூ டைமன்ஷன்ல லீட் கிடைச்சிருக்கு. இதுநாள் வரைக்கும் சாத்தியம் இல்லை அப்படிங்கற ஒரு விஷயம் கண்டிப்பா சாத்தியம் என்று நமக்கு கண் கூட முத்து சார் காமிச்சி இருக்காரு…”என்று அந்த அதிகாரி கூறிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்ட கமிஷனர் “உங்க மிஸ்டேக் என்னன்னு எனக்கு இப்ப புரியுது காதர். நீங்க உங்களை அறியாமலே நியூச வெளியில் சொல்றீங்க. முத்து என்ற பெயரை நீங்க காரணத்தை கொண்டு உபயோகப்படுத்த கூடாது என்கிறது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இனிமேல் இந்த தப்பா பண்ணாதீங்க மேல சொல்லுங்க” என்றார்.
“சாரி சார்” என்று கூறிவிட்டு மேலும் பேசத் தொடங்கிய அந்த அதிகாரி தற்போது வரை என்ன நடந்துள்ளது என்பதை விலாவாரியாக கமிஷனரிடம் எடுத்துரைத்தார். அனைத்தையும் கேட்ட கமிஷனர் புன்னகையுடன் “சோ இதுல நம்ம கரெக்டான டைரக்ஷன்ல போயிட்டு இருக்கோம் இல்லையா?” என்றார். “ஆமா சார், கண்டிப்பா எனக்கும் அப்படித்தான் தோணுது. கரெக்டான டைரக்ஷன்ல தான் போயிட்டு இருக்கோம்”என்று அந்த அதிகாரியும் கமிஷனிடம் கூறினார். “ஓகே நெக்ஸ்ட் என்ன பிளான்” என்றார் கமிஷனர். “சார் இதுவரைக்கும் கிடைச்சிருக்கு எல்லா டேட்டாவையும் வச்சு இன்னைக்கு எங்க கூட வந்த ஆபீஸரோட ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணுவோம் சார். அவரோட கேஸ் டேட்டா அனலிஸ்ட் ஆபீஸர் ஒருத்தரை வைத்து இந்த கேச ரீ ஓப்பன் பண்றதுக்கு உண்டான லீட் என்ன அப்படிங்கறத டிஸ்கஸ் பண்ணி, ஃபைனல் பண்ணுவோம் சார்” என்றார். “ஓகே காதர் வெரி குட், கேரி ஆன்” என்று கூறிய கமிஷனரிடம் மீண்டும் எழுந்து நின்று சல்யூட் அடித்து விட்டு வெளியேறிய அந்த அதிகாரி மீண்டும் அந்த மற்றொரு அதிகாரியுடன் இணைந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரித்து ஒன்றாக்க தொடங்கினார்.
“சார், கமிஷனர் என்ன சொன்னார்” என்று கேட்ட மற்றொரு அதிகாரியிடம். “சார் நெக்ஸ்ட் பிளான் என்னன்னு கேட்டாரு வேறு ஒன்றும் இல்லை”என்றார். “இப்ப நம்ம நெக்ஸ்ட் பிளான் என்ன சார்?, அந்த எக்ஸ்பீரியன்ஸ் ஆன கேஸ் டேட்டா அன லிஸ்ட் யாரு சார்?” என்று கேட்ட மற்றொரு அதிகாரியிடம் “அவர்தான் சார் ஹீரோ, பார்க்கத்தானே போறீங்க. இப்ப வரைக்கும் அவர் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. யாரும் கேட்டதும் இல்லை அவரும் யார் கிட்டயும் சொன்னதும் இல்லை சீக்ரெட் சர்விஸ்ல எல்லாரும் செல்லமா கூப்பிடுற பெயர் மிஸ்டர் டிடெக்டிவ் என்றார்..
(தொடரும்…)