சென்னை அடையாறு இளைஞர் விடுதியில் டிசம்பர் 16 அன்று நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் 2023 மற்றும் 2024க்கான கலந்தாய்வு நிகழ்வு ஆசிரியர் ஆர்.சிவகுமார் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் சி.விமலேஸ்வரன், மூத்த பத்திரிகையாளர் என்.செல்வராஜ் ஆகியோர் நிருபர்களின் திறன் மேம்பட ஆலோசனை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக வழிநடத்திய சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் நீதியின் நுண்ணறிவு இதழின் சார்பாக வாழ்த்துகள்…