தென்காசி மாவட்டத்தில் (27.12.2023) நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் -முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மக்களுடன் முதல்வர் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் தென்காசி நகராட்சியில் 7, 8, 20, 21, 22 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் யாதவர் மண்டபத்திலும், கடையநல்லூர் நகராட்சியில் 4,14,15,16,17 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் முத்துக்கிருஷ்ணாபுரம் சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்திலும், புளியங்குடி நகராட்சியில் 24,25,26,27,28 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் இல்லத்து பிள்ளைமார் திருமண மண்டபத்திலும், சங்கரன்கோவில் நகராட்சியில் 16,17,18,19,20 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் புதுமனை தெருவிலுள்ள வர்த்தக சங்கத்திலும், செங்கோட்டை நகராட்சியில் 16,17,18,19,20 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் நகர்மன்ற கூட்ட மண்டபத்திலும், சுரண்டை நகராட்சியில் 18,19,21,22 ஆகிய வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் வரகுணநாதபுரம் இந்து நாடார் மண்டபத்திலும், குற்றாலம் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் “முகாம் பூங்கா சாலை சமுதாய நலக்கூடத்திலும், ஆலங்குளம் நகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் பல்நோக்கு சமுதாய நலக்கூடத்திலும், மேலகரம் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் திரிகூடராசப்பக் கவிராயர் திருமணமண்டபத்திலும் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. எனவே. மக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உள்ளனர்.