கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பல இளைஞர்களை போலவே, பல கனவுகளோடு வந்து வெற்றி பெற்ற ஒரு இளம் தொழில் முனைவோர் பற்றி காண்போம்.
சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தரங்கம்பாடி பிஷப் மித்ரன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டப்படிப்பை முடித்தவர் ஜெயபிரகாஷ் நாராயணன். இவர் ஒரு விவசாயியின் மகன்.
பல கனவுகளோடு 20 வருடங்களுக்கு முன் சென்னை நோக்கி வந்தவர் இன்று தன் தனித்திறமையால் போராடி SS Aqua என்ற தனிநிறுவனத்தை உருவாக்கி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்னாடகா என நான்கு மாநிலங்களில் தொடர்ந்து நீச்சல் குளங்கள் வடிவமைப்பது, கட்டுமான பணிகள் மற்றும் அதைச் சார்ந்த பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்.
நீச்சல் குளம் சார்ந்த தொழில்நுட்பத்தில் இவருக்கு இருக்கும் சிறப்பான அனுபவத்தின் மூலம் பல்வேறு பெரும் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். தன்னுடைய சொந்த ஊரைச் சார்ந்த இளைஞர்களுக்கு தன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.
தனது சென்னை வாழ்க்கையை தொடங்கி வைத்த தனது நண்பர் மறைந்த திரு.ஜார்ஜ் ரான்சன் ப்ரனேஷ் அவரது நினைவை போற்றும்விதத்தில் அவரது பெயரில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் நான்குபேருக்கு ஊக்கப்படுத்தும்விதமாக ஒரு லட்சம் மதிப்பிலான இரண்டு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கியுள்ளார். மற்றும் கல்விக்காக சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணங்களை வழங்கி உதவி வருகிறார். சமீபத்தில் தான் படித்த பள்ளிக்குச் சென்று உதவிகள் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
தன் தொழில் சார்ந்ததை மட்டும் பாராமல் தான் சென்னை வந்தபோது உடனிருந்த நண்பர்களை மறவாமல், அவர்கள் அனைவரையும் குடும்பத்தோடு வரவழைத்து தன் நிறுவனத்தின் 15ம் ஆண்டு விழாவினை சென்னை ஈசிஆர்-ல் உள்ள ரிசாட்டில் சிறப்பாக கொண்டாடி நண்பர்களையும் கௌரவப்படுத்தியுள்ளார்.
இவரின் நிறுவனமும், நற்பணிகளும் மென்மேலும் வளர நீதியின் நுண்ணறிவு சார்பாக வாழ்த்துகிறோம்.