தஞ்சை மாவட்டத்தில் இருந்து கல்லணை வழியாக பெண்ணாறு, வெட்டறு, கொள்ளிடம் போன்ற பல பிரிவாக பிரிந்து பட்டுக்கோட்டை பகுதியில் மகாராஜா சமுத்திரம் கண்ணன் ஆறு, நசுனு ஆறு, நரி ஆறு என்று பல கிளை ஆறுகள் உள்ளன. மழைக்காலங்களில் தஞ்சாவூர் கந்தர்வகோட்டை போன்ற பகுதியிலிருந்து நரியாருக்கு தண்ணீர் வரும். காவேரி தண்ணீர், மகாராஜா சமுத்திரம் போன்ற ஆறுகளில் பாய்ந்து ஓடி, குறைந்த அளவில் உபயோகப்படுத்தியது போக வெகுவான அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வீணாக ராஜா மடம் அருகில் வங்கக் கடலில் கலக்கிறது. இது போன்ற இடங்களில் சிறிய அளவிலான தடுப்பணைகளை கட்டும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் தடுப்பனையானது பாசன வசதி தேவைப்படும் விளைநிலங்களை தாண்டி எவ்விதமான பாசனத்திற்கும் பெருமளவில் பயன்படாமல் உள்ளது. பட்டுக்கோட்டையை மையமாக வைத்து ஏனாதி, கிளாமங்கலம், ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் தடுப்பணைகள் கட்டினால் வங்கக் கடலில் வீணாக சென்று கலக்கும் காவிரி நீரை சேமிக்க முடியும். அதுபோல் பட்டுக்கோட்டை மகாராஜா சமுத்திரம், பண்ணை வயல், பள்ளி கொண்டான், சேண்டா கோட்டை, மாளிகை காடு போன்ற பகுதிகளில் தடுப்பணை கட்டினால் பட்டுகோட்டை பகுதியில் தண்ணீர் பஞ்சமே இருக்காது.
மேலும் விவசாய விளை நிலங்கள் காக்கப்படுவதோடு விளை நிலைகளை தண்ணீர் இல்லாததை காரணம் காட்டி மனைகளாக மாற்றப்படுவதும் தவிர்க்கப்படும். தண்ணீர் இல்லாத காரணத்தினால் வயல்வெளி எல்லாம் கூறு போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
இனி வருங்காலங்களில் புகழ்பெற்ற மகாராஜா சமுத்திரம் மாதிரி பகுதிகளில் விவசாயிகள் அற்றுப் போகும் நிலையில் உள்ளது. எனவே அப்பகுதி விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் மனம் குமரி மகாராஜா சமுத்திரத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.
யானை கட்டி போரடித்த சோழ மன்னன் வாழ்ந்த நெற்களஞ்சியம் தஞ்சையில் வங்கக்கடலில் வீணாக கலக்கும் நீரை தேக்கி விவசாயிகளை வாழ்வாதாரத்தை பெருக்க இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறப்படும் விவசாயத்தை காக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்று எதிர்பார்க்கிறார் அப்பகுதி விவசாயிகள்.