மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
“சாலை பாதுகாப்பு மாதம்-2025” முன்னிட்டு மதுரை தமுக்கம் சந்திப்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இருசக்கர வாகன பேரணியானது தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலையில் இருந்து துவங்கி வடக்குமாசி வீதி சந்திப்பில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை, ஊர் காவல்படை காவலர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையர், காவல் கூடுதல் துணை ஆணையர், போக்குவரத்து உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் தமுக்கம் சந்திப்பில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்