சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு
Noise Cancellation Earphone இயந்திரங்கள்
சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு,போக்குவரத்திலிருந்து வரும் அதிக ஒலி அலைகளை தடுக்கும் Noise Cancellation Earphone இயந்திரங்கள் வழங்கப்பட்டது
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தினமும் 8 மணிநேரம் போக்குவரத்து சந்திப்புகளில் அயராது பணிபுரிந்து வருகின்றனர், இப்போக்குவரத்தினால் ஏற்படும் இடைவிடாத சத்தமானது 90 முதல் 150 dB வரையில் இருப்பதாக தெரியவருகிறது. இத்தகைய அதிக இரைச்சல் அளவுகளை கொண்ட ஒலி அலைகள் நீண்ட நேரம் வெளிப்படுத்துவதால், இப்போக்குவரத்து சந்திப்புகளில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது, இதனால் பொதுமக்களுடன் திறம்பட பணியில் ஈடுபடும் திறனைத் தடுக்கிறது.
இந்த நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காது பிளக்குகள் மற்றும் சத்தத்தைக் குறைக்கும் கருவிகளை அறிமுகப்படுத்தி சோதனையைத் தொடங்கியுள்ளது. F-3 நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு ASTRA உருவாக்கிய அமெரிக்கன் ஸ்டார்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பயன் இயர்ப்ளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இயர்ப்ளக்குகள் இரைச்சல் அளவை 25 % வரை குறைக்கின்றன மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இருக்கின்ற அவைகள்:
போக்குவரத்திலிருந்து வரும் அதிக ஒலி அலைகளை தடுக்கப்படுதல், அதிக இரைச்சல் அளவினை குறைத்தல்.
“உரையாடல் தெளிவாக கேட்பதற்காக, தேவையற்ற சத்தத்தைத் தடுக்கிறது. நீண்ட பணி நேரங்களில் இந்த ஒலி அலைகளை சொகுசாக உணருகின்றன தனிப்பயன்பாட்டின் வசதிக்காக தனி தனியாக பொருத்தப்பட்டுள்ளது”.
இந்தியாவில் முதல் முறையாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் செவிப்புலன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது போக்குவரத்துப் பணியாளர்களுக்கு ஒலியை இரத்து செய்யும் ஹெட்ஃபோன்களை வழங்குவதில் முதல் மாநிலமாக உள்ளது. இந்த சாதனங்கள் சுற்றுச்சூழல் இரைச்சலைக் கனிசமாக குறைக்கின்றன. அதிக இரைச்சல் நிலைகளில் சிறந்த கவனம் செலுத்துவதிலும் மற்றும் செவிப்புலன் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
R. சுதாகர், I.P.S., கூடுதல் காவல் ஆணையர் (போக்குவரத்து), உடன் D.மகேஷ் குமார், IPS, இணை ஆணையாளர் (வடக்கு( திரு.V.பாஸ்கரன், துணை ஆணையாளர் (போக்குவரத்து/கிழக்கு) திரு.Kபாஸ்கரன், உதவி ஆணையாளர் (போக்குவரத்து திட்டமிடல்), செவிப்புலன் தீர்வுகளில் நிபுணரான ASTRA ஹியரிங் கேரின் மருத்துவ ஆதரவுடன், F-3 நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தின் 20 அதிகாரிகளுக்கு ஒலியை ரத்து செய்யும் ஹெட்ஃபோன்களை வழங்கி, இந்த புதிய முயற்சியைத் தொடங்கி வைத்தார். போக்குவரத்து அதிகாரிகளின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க படியாகவும், வரும் நாட்களில் அனைத்து போக்குவரத்து காவல் பணியாளர்களுக்கும் ஹெட்ஃபோன்கள் வழங்குவதை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன