
மதுரை மாநகர் பகுதியின் மையத்தில் உள்ள பழங்காநத்தத்தில் தமிழக அரசின் பத்திரபதிவு துறையின் கீழ் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகம் இருக்கிறது, இந்த சார் பதிவாளர் அலுவலத்தில் தான் ஆறு கிலோமீட்டர் சுற்றி உள்ள இடங்களை வருவாய் துறையின் நில அமைப்புகளின் படி சொத்துக்களை விற்க வாங்க, பழங்காநத்தம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்ய படுகிறது,
அப்படி பதியபடும் பத்திரங்களில் பல்வேறு தவறுகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகாராக சம்பந்தபட்ட துறை அதிகாரிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறினார்கள்
சரி என்ன நடக்குது என அறிய பழங்காநத்தம் சார்பதிவாளர் அலுவலகம் சென்று புகார் மனு குறித்து அங்கே உள்ள அலுவலகரிடம் பேசினோம், அப்போது அங்கு இருந்த அலுவலர் சார் இங்கே எல்லாம் சரியா இருந்தா தான் பத்திரம் பதிய முடியும், தவறுகள் இருந்தது தெரிந்தால் பத்திரபதிவு செய்வது இல்லை, மேலும் இங்கு முறையாக டோக்கன் முறையில் தான் பத்திரம் பதிவு செய்கிறோம் என குழந்தையாக பதில் அளித்தார்,
தொடர்ந்து நம்மிடம் இருந்த புகார் மனுவில் உள்ளதை சுற்றி காட்டி கேள்வி எழுப்பி னோம் அதற்கு பதில் தர மறுத்து சார் எனக்கு வேலை இருக்கு என நழுவி கொண்டார்,
பழங்காநத்தம் பத்திரபதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பெண் தனக்குரிய பங்கு சொத்தை என் அனுமதி இல்லாமல் விற்க கூடாது என தாவா மனு அளித்தும் அதனை உதாசீன படுத்தி சட்ட விதிமுறைகளை மீறி வேறு நபருக்கு பத்திரம் பதிவு செய்து தந்து உள்ளனர் அதற்கு பலனாக சில லகரங்களை பெற்று உள்ளனர், இது போன்று பல்வேறு முறைகேடுகளும், ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் பதிவு செய்வதாக குற்றசாட்டுகள் கூறபடுகிறது, இது குறித்து உடனடியாக துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்,
பத்திரபதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி மதுரை க்காரராக இருக்கும் போது இப்படியோரு தவறுகள் நடக்கலாமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்,
