திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்ட காவல்துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு First Heart Foundation Network பேரிடர் மீட்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் பேரிடர் காலங்கள் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் விபத்து நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் முறை மற்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதல் உதவிகள்(FIRST AID) குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், பயிற்சியின் முடிவில் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முதலுதவியின் முக்கியத்துவம் பற்றியும், பேரிடர் காலங்கள் மற்றும் எதிர்பாரத விபத்துகள் போன்றவை ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றியும் விளக்கிக் கூறியதுடன் சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.




