தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி 29.06.2025-ம் தேதி பட்டுக்கோட்டை உட்கோட்ட நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனத் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி பட்டுக்கோட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் பட்டுக்கோட்டை தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு.ராம்குமார் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் குற்றவாளியான பேராவூரணி, களத்தூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்ைகு உட்படுத்தப்பட்டனர்.
