திமுக முன்னாள் எம்பியும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் 87 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சையில் உள்ள ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் கடந்த வாரம் 87 சவரன் தங்க நகைகள் திருடுப் போயின. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க,
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு. ராஜாராம் TPS உத்தரவின் படி,
தஞ்சாவூர் வல்லம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. காயத்ரி அவர்கள் மற்றும் தஞ்சாவூர் நகர உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர் திரு திரு.சோமசுந்தரம் அவர்கள் மேற்பார்வையில் தமிழ் பல்கலைக்கழகம் ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் திரு. அகிலன் உதவி ஆய்வாளர் திரு.தென்னரசு தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சாமிநாதன்
தலைமை காவலர்கள் திரு.கோதண்டபாணி திரு. திருகுமரன் முதல் நிலை காவலர் திரு.அருண்மொழி வர்மன் ,இரண்டாம் நிலை காவலர்கள் திரு.இஸ்மாயில் திரு. பிலிராஜ்திரு.பிரகாசன் திரு. சிம்ரான்*திரு.விஜயசந்திரன் திரு. ரஞ்சித் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில்,
குற்ற சம்பவத்தில் ஈடுப்பதில் 1.மொய்தீன் 37/25 s/o. முகமது யூசுப் நேரு நகர், இளங்கோ நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தர்மபுரி மாவட்டம். 2. சாதிக் பாஷா 33/25 s/o. முகமது யூசுப்,நேரு நகர், இளங்கோ நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தர்மபுரி மாவட்டம் 3. பாத்திமா ரசூல் 54/25 w/o. முகமது யூசுப்,ரயில் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தர்மபுரி மாவட்டம் 4. ஆயிஷா பர்வீன் 30/25 D/o.s/o. முகமது யூசுப் ரயில் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தர்மபுரி மாவட்டம்
என்பதை அறிந்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை மேற்கொண்ட விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களும் ஊரை விட்டு சென்னையில் பதுங்கி இருந்த போது அதிரடியாக நான்கு பேரை கைது செய்து தர்மபுரி மாவட்டத்தில் களவு போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்டு மேற்கண்ட எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். தலைமறைவு குற்றவாளி 5.ஷாஜகான் 26/25.s/o. முகமது யூசுப், ரயில் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தர்மபுரி மாவட்டம்.
மேலும் எதிரியை பிடிக்க உதவிய தஞ்சை சைபர் கிரைம் இரண்டாம் நிலை காவலர் திரு. பிரகதீஸ்வரன் மற்றும் திரு. ஜோஸ்வா ஆகிய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
இந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
