சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன், வ/47 என்பவர், கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருவதாகவும், (03.03.2026) காலை, வேல்முருகன் அடுக்குமாடி குடியிருப்பில் பணியிலிருந்தபோது, ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர் ஒருவர் நுழைவு வாயிலில் தெரிவிக்காமல் இருசக்கர வாகனத்தில் உள்ளே நுழைந்ததால், வேல்முருகன் அந்த நபரை தடுத்து ஏன் இப்படி வந்தீர்கள்? என கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த டெலிவரி ஊழியர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று வேல்முருகன் மீது மோதி, பின்னர் வேல்முருகனை கையால் தாக்கியதில் வேல்முருகன் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு மயங்கி வாயிலிருந்து இரத்தம் வந்ததாகவும், இதனால் அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதாகவும், இரத்தக்காயமடைந்த வேல்முருகனை தனியார் மருத்துவமனையில் சேர்த்து பின்னர் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருவதாகவும், உடன் பணிபுரிந்து வரும் காவலாளி சுந்தரம், வ/63 என்பவர் R-7 கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-7 கே.கே.நகர் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி தினேஷ், வ/25, வெங்கடேஸ்வரா நகர், விருகம்பாக்கம், சென்னை என்பவரை (03.03.2026) கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி தினேஷ் விசாரணைக்குப் பின்னர், (03.03.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
