புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மாத்திரைகள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, கடத்தல் சம்பவத்தில்
ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் ..
